விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு 17 ரூபாய் என்பது அவமானம்

ஒரு நாளைக்கு 17 ரூபாய் என்பது விவசாயிகளுக்கு செய்யப்படும் அவமானம் என இடைக்கால பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், 2 ஹெக்டருக்கு குறைவான நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். 3 தவணைகளாக விவசாயிகளின் கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் விமர்சித்துள்ளார். இந்த தொகையை நாள் ஒன்றுக்கு என கணக்கிட்டுள்ள ராகுல் காந்தி, நாள் ஒன்றுக்கு 17 ரூபாய் வழங்குவது என்பது, இத்தனை நாட்களாக விவசாயிகள் எதற்காக செயல்பட்டார்களோ, உழைத்தார்களோ அதற்கு செய்யப்படும் அவமானம் என கூறியுள்ளார். 5 ஆண்டுகளில் உங்களின் திறமையின்மையும், ஆணவமும் விவசாயிகளின் வாழ்வை அழித்துவிட்டது என்றும் பிரதமர் குறித்து விமர்சித்துள்ளார்.

Exit mobile version