இலங்கையில் நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு அரசு 10 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்கள் உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் 290 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு முதல் இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முப்படைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அறிவித்துள்ளார். குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடு வழங்கப்படும் என்று அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.