பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவிய 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 1 லட்ச ரூபாய்க்கான காசோலையும் விருதும் வழங்கப்பட்டது.
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவிய கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ரக்சனாவுக்கு, முதலமைச்சர் பழனிசாமி 1 லட்ச ரூபாய்க்கான காசோலையும், மாநில அரசின் விருதினையும் வழங்கி கவுரவித்தார். அப்போது மாணவி ரக்சனா, தமிழகத்தில் விதைப்பந்துகள் தூவுவதை சட்டமாக கொண்டு வந்தால், அரசு வழங்கிய ஒரு லட்ச ரூபாயை நிதியாக வழங்குவேன் என முதலமைச்சரிடம் உறுதியளித்தார்.
முன்னதாக ரக்சனா 1,000 மரக்கன்றுகளை மாவட்டம் முழுவதும் நட நன்கொடை கொடுத்தது, கண் தானம் வழங்க ஊக்குவித்தது, உலக வெப்ப மயமாக்கல் பற்றி விழிப்புணர்வு செய்தது மற்றும் இடைநின்ற மாணவர்களை மீண்டும் படிக்கத்தூண்டியது போன்ற பொதுச்சேவைகளில் ஈடுபட்டுவந்தார்.