சென்னையில் இருசக்கரவாகனத்தில் சென்றவர்கள் வீசிய மர்மப் பையில் இருந்து1 கோடியே 56 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை கோட்டூர்புரத்தை அடுத்த வரதாபுரம் லாக் தெருவில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இதைக்கண்ட காவல்துறையினர் சந்தேகத்திற்குரியவர்களை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது, இருசக்கரவாகனத்தை ஓட்டியவர்கள் 3 மர்மப் பைகளை கீழே போட்டு விட்டு தப்பிச் சென்றனர். கீழே வீசிய பையை ஆய்வு செய்தபோது, பணக்கட்டுகள் இருந்ததைத் தொடர்ந்து 3 பைகளும் காவல்நிலையத்துக்கு எடுத்துசெல்லப்பட்டது. இதன்பின் இரவு ரோந்து ஆய்வாளர் நடத்திய தணிக்கையில் மர்மப் பைகளில் இருந்து 1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.