சென்னை கொளத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்டப்பட்ட திருவிக நகர் பல்லவன் சாலை காலி மைதானத்தில் நின்று கொண்டிருந்த நபர்களை 2.அடி நீள பட்டாகத்தியோடு வந்து ஓட ஓட விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை திருவிக நகர் பல்லவன் சாலை அருகே உள்ள காலி மைதானம் அருகே நேற்று இரவு 9 மணியளவில் 10 மேற்பட்ட நபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.அப்பொழுது கையில் பட்டாகத்தியோடு ஓடி வந்த வாலிபர் ஒருவர் அந்த கும்பலில் இருந்த அனைவரையும் சாராமாரியாக வெட்டுகிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கும்பல் தங்களது இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தெரித்து ஓடுகிறது. இருந்தாலும் பின்னால் வந்த தனது கூட்டாளியின் இருசக்கர வாகனத்தில் துரத்தி செல்லும் நபர் மீண்டும் அதே இடத்திற்கு வந்து அங்கே தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த நபர்களையும் பட்டாகத்தியால் வெட்டுகிறார்.
அவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என இருசக்கர வாகனத்தையும் தங்களது உடமைகளை போட்டுவிட்டு ஓடுகிறனர். தகவல் அறிந்து திருவிக நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது வெட்டியது அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி இமான் என்பதும் மது போதையில் அங்கு நின்று கொண்டிருந்த நபர்களை வெட்டியதும் தெரியவந்தது. அதேபோல பலரை வழி நெடுகில் பொதுமக்களை வெட்டியதும் தெரியவந்துள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இமான் மீது திருவிக நகர், ராயப்புரம் உள்ளீட்ட 3 காவல் நிலையங்களில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
முதல்வர் தொகுதியில் நேற்று முன் தினம் ஒரு கும்பல் ஒன்று கத்தி முனையில் ரியல் எஸ்டேட் ஊழியர் ஒருவரை கடத்தி சென்ற நிலையில் நேற்று இரவு பட்டாகத்தியால் பலரை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
முதல்வர் தொகுதியிலே சட்டம் ஒழுங்கு சீர் குழைந்து பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுவதாகவும் , போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுப்பட வேண்டும் எனவும் அப்பகுதி த
மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்..