காஞ்சிபுரம் அருகே பாமக நிர்வாகி உட்பட மூவரை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
பாமகவின் தாமல் பகுதி ஒன்றிய செயலாளாக இருந்து வரும் ஜெகன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் முன்பு மனைவி ஜெயலட்சுமி மற்றும் தம்பி பசுபதியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிமாறன் என்பவர் மூவரையும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பசுபதி மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மணிமாறன் மீதி பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post