ரோல்ஸ் ராய்சின் புதிய வகை கார் சென்னையில் அறிமுகம்

ரோல்ஸ் ராய்சின் விலையுயர்ந்த கார் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட், டான், ரே, பாந்தமெய்ட் போன்ற அடுத்தடுத்த தயாரிப்புகள் கார் பிரியர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாக உள்ளது. இந்த நிறுவனம் தற்போது கல்லனின் என்ற புதிய வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த காராக இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார், எஸ்.யூ.வி. ரகத்தை சேர்ந்தது என்று ரோல்ஸ் ராய்ஸ் குழுமத்தின் தென்னிந்திய மேலாளர் வசந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில், ரோல்ஸ் ராய்சின் இந்த புதிய கல்லனின் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ. 6 கோடியே 95 லட்சம். இந்த காரை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப 44 ஆயிரம் வண்ணங்களில் உருவாக்க முடியும் என்றும் வசந்தி தெரிவித்துள்ளார்.

இரட்டை டர்போ இன்ஜின் வடிவமைப்பை பெற்றுள்ளது. காரின் பின்புறம் இளைபாறுதலுக்காக இரண்டு இருக்கைகள் பொருத்தப்பட்டு அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது இந்த புதிய ரக கார்.

கடினம் இல்லாமல் எளிதாக இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கல்லனின் ரகம், தென் இந்தியாவில் தற்போது விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version