சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா இரண்டாவது நாளாக இன்று ஆஜராக உள்ளார்.
லண்டனில் சொத்துக்கள் வாங்கிய விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவுபடி, ஜாம்நகர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா நேற்று ஆஜரானார்.
வதேராவை, அவரது மனைவி பிரியங்கா காந்தி காரில் வந்து இறக்கி விட்டார். அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்விகளுக்கு வதேரா அளித்த பதில் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. ஏழு மணிநேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். இதனிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமது கணவர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post