சென்னையில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரை கத்தியால் வெட்டி விட்டு அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டுகள் மற்றும் செல்போன், பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்ற 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை தியாகராயநகர் வியாசர் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணின் தந்தை சீனிவாசன் வயது மூப்பின் கானணமாக தந்தைக்கு சீனிவாசனின் அறுவை சிகிச்சைகாக அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த கிருஷ்ணன் கடந்த எட்டாம் தேதி இரவு சுமார் 12 மணி அளவில் தனியார் ஹோட்டலில் மது அருந்தி விட்டு வெளியே வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து அவரை வழி மறித்து தலையில் வெட்டி விட்டு அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் 10 க்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள், ஒரு சோசியல் சொசைட்டி கார்டு மற்றும் அமெரிக்க கிரீன் கார்டு ஒன்று, பேன் கார்டு ஒன்று மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு பறந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தியாகராய நகர் காவல் மாவட்ட துணை ஆணையர் அசோக்குமார் உத்தரவின் பேரில் மாம்பலம் துணை ஆணையர் கலியன் மேற்பார்வையில் சட்டம் ஒழுங்கு காவல்துறை
ஆய்வாளர் பாலமுரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி பதிவுகளை வைத்து ஜெயந்தி நாதன், நாகராஜன், மணிகண்டன் என்ற பட்டாபி, மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் மற்றும் கொள்ளை அடிக்கப்பட்ட வங்கி அட்டைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் 4 குற்றவாளிகளையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். புகார் அளிக்கப்பட்ட சில நாட்களிலேயே சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை அதிகாரிகளை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார்..
Discussion about this post