திருப்பதி ஏழுமலையான் கருவூலத்திலிருந்து விலையுயர்ந்த நகைகள் திருட்டப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அதிகாரிகள் துணை போனதாக கூறப்படுவதால், உரிய விசாரணை நடத்த பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கருவூலத்தில் இருந்த நகைகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. ஏழுமலையானுக்கு பயன்படுத்தும் 296 நகைகளை தவிர்த்து, பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நகைகள் திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த, வெள்ளி கிரீடம், தங்கம் ஹாரம், 2 தங்க மோதிரங்கள் சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தேவஸ்தான கருவூலத்தில் இருந்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் இந்து மத சங்கத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகை திருட்டை மறைக்க தேவஸ்தான அதிகாரிகள் முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உடனடி விசாரணை மேற்கொண்டு, களவாடப்பட்ட நகைகளை மீட்க வேண்டும் என்று பல்வேறு
Discussion about this post