சாலை விபத்துகளில் தமிழகமே முதலிடம்! விழிப்புணர்கொள் விடியா அரசே!

சாலைப் பகுதிகளை சோலைப் பகுதிகள் போல பராமரிப்பது ஒரு அரசின் கடமை. அதனை கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக திறம்பட செய்தது. ஆனால் இந்த விடியா திமுக அரசோ, எதனையும் கண்டுகொள்ளாமல் தனக்கென்ன என்று செயல்படுகிறது. சாலை விபத்துகள் ஒரு குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தினையும் பாதிக்கிறது. சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் பல குடும்பங்களை மீளாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

சாலை விபத்துகள்..!

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் பதிவாகின்ற விபத்துகளை கணக்கெடுத்ததன் வாயிலாக ஒரு அதிர்ச்சிகர தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அதாவது ஆண்டுதோறும் சாலை விபத்துகளானது அதிகரித்த வண்ணம் உள்ளது, குறைந்தபாடில்லை. அதிலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த 17 ஆயிரம் கோர விபத்துகளி;ல் 12 ஆயிரத்து முப்பதுரண்டு பேர் இறந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நான்காயிரத்து 893 பேரும், மாநில நெடுஞ்சாலைத்துறை கீழ் உள்ள நெடுஞ்சாலையில் 952 பேரும், மாநில நெடுஞ்சாலையில் 6 ஆயிரத்து 187 பேரும் இறந்துள்ளனர்.

விழிப்புணர்வின் தேவை..!

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 18-ம் தேதி முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளை குறைக்கவும், சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்துகள் நடைபெறா வண்ணம் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இது கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடித்துக் கொண்டிருக்கும்போதே பல விபத்துகள் சாலையில் நடந்தேறுகின்றன. இந்தியாவில் சாலை நெடுஞ்சாலை விபத்துகள் நடக்கும் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை சாலை விபத்துகள் நடந்தேறும் முக்கிய மாநிலங்களாக சொல்லப்படுகிறது.

தமிழகமே முதலிடம்..!

கடந்த ஆண்டு மட்டும் மாநில வாரியாக எடுத்துக்கொண்டோமானால்,

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் 16,869 ஆகும். இதில் இறப்புகள் 5,263 ஆகும். உத்தரபிரதேசத்தில் 14,540 விபத்துகளும், 8,506 இறப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஆந்திர பிரதேசத்தில் 8,241 விபத்துகளும் 3,602 இறப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 8,048 விபத்துகளும் 975 இறப்புகளு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் 7,501 விபத்துகளும் 4,080 இறப்புகளும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை கட்டுப்கோப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று மார்தட்டும் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் இந்த சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கேட்டால் பதில் இல்லை என்பதுதான் பதில். மாறாக, கடந்த ஏழு மாதங்களில் மட்டும் சாலை விதி மீறல்கள் மூலம் 60 கோடி வருவாய் ஈட்டியிருக்கும் போக்குவரத்துத் துறை இந்த சாலை விபத்துகளை தடுக்க என்ன மாதிரியான விழிப்புணர்வு எடுத்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Exit mobile version