நதிகள் இணைக்கப்பட்டால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்: தமிழக ஆளுநர்

நதிகள் இணைக்கப்பட்டால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் கே.வி. கண்ணன் எழுதிய காவேரியின் புனிதமும் போராட்டமும் என்ற புத்தகத்தை ஆளுநர் பன்வரிலால் புரோஹித் வெளியிட்டார். இதனை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் உள்ள நதிகள் அனைத்தும் இணைப்பது அவசியம் என்று கூறினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், அதிமுக ஆட்சி ஐந்து ஆண்டுகளை சிறப்பாக நிறைவு செய்யும் என்றும் கூறினார்.

 

Exit mobile version