கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை கொண்டு மீன் பிடித்த மீனவர்களின் படகை மற்றொரு பிரிவினர் தீ வைத்துக் கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அன்னங்கோயில் மீன்பிடித் துறைமுகத்தில் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தது தொடர்பாக இரு பிரிவு மீனவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவதை தடுக்க கோரி மீனவர்கள், மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டம் நடத்தினர். அப்போது சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து திரும்பிய மீனவர்களின் படகை மற்றொரு பிரிவு மீனவர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மீன்களை கொள்முதல் செய்யும் நிறுவனமும் அடித்து நொறுக்கப்பட்டது. வன்முறைச் சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுக்க அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 கிராம மீனவர்கள் நாளை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
Discussion about this post