பெங்களூர் :
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தனது நீண்ட நாள் கனவான மறுபயன்பாட்டிற்கு பயன்படும் ராக்கெட் ஏவுதல் வாகனத்தினை உருவாக்கியிருக்கிறது. ஆங்கிலத்தில் இதனை REUSABLE LAUNCHING VEHICLE என்று அழைப்பர். தற்போது இந்த ஏவுதல் வாகனத்தின் சோதனை ஓட்டத்தினை இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது.
இந்த சோதனை ஓட்டத்தினை இன்று ஏப்ரல் 2 ஆம் தேதியில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்காவில் அமைந்திருக்கும் ஏரோனாடிகல் டெஸ்ட் ரேஞ்ச் என்ற அமைப்பு ஒன்றிணைத்திருக்கிறது. இதன் மூலம் தேவையற்ற செலவுகளைக் குறைக்க முடியும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. ராக்கெட் செய்வதற்கான உழைப்பினையும் நிதியையும் ஈட்டி அதனை தயார் செய்து இறுதியில் கடலில் வீசுவதன் மூலம் சில பொருளாதார பிரச்சினைகள் இருந்து வந்தன. ஆனால் இந்த சோதனையின் வெற்றியின் மூலம் இனி நிதியினை கட்டுப்படுத்த முடியும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
இந்த ரீயூசபிள் லாஞ்சிங் வெகிக்கிளினை ஹெலிகாப்டர் மூலம் 4.6 கி.மீ தூரத்திற்கு வானில் தூக்கிச்சென்று அங்கிருந்து ராக்கெட்டினை ஏவ வழிவகை செய்திருந்தனர். அதன்படியே ஏவவும் பட்டது. பின் அங்கிருந்து பூமியை நோக்கி 4.5 கி.மீ தூரத்தில் பயனப்பட்டு சரியாக தரையில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி இறக்கப்பட்டது. ஏவுதள வாகனத்தைக் கொண்டு சென்றது சினூக் ஹெலிகாப்டர் ஆகும். இன்று (ஏப்.2) காலை 7:10 மணிக்கு ஏவப்பட்ட ஏவுதள வாகனம் 7: 40 மணிக்கு சரியாக ஏரோனாடிகல் டெஸ்ட் ரேஞ்ச் உடைய தளத்திற்கு வந்து சேர்ந்தது. தரையிரங்கும்போது சரியாக 350 கிமீ வேகத்தில் இறங்குவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. தரையிரங்குவதற்கான சூழலையும், வேகத்தினையும், நிலையையும் ரீயூசபிள் ஏவுதள வாகனத்தில் உள்ள தானியாங்கி கருவியே பார்த்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. இச்சாதனையை இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ. மற்றும் இந்திய விமானப்படையின் உதவிகொண்டு நிகழ்த்தியுள்ளது.