பொங்கல் பரிசுகளை பெற கட்டுப்பாடுகள் விதிப்பு

மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு, பொங்கல் பரிசுகளை பெற அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு துண்டு ஆகிய பொருட்களுடன்  1,000 ரூபாயை தமிழக அரசு வழங்குகிறது.

வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் ரேஷன் கடைகள் மூலம் இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், பரிசுபொருள் பெற வருவோர் மின்னணு ரேஷன் அட்டையை கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசு தொகுப்பு பெற வருவோர், ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ரேஷன் அட்டையில் பெயர் இல்லாதவர்கள், பெயர் உள்ளவர்களில் ஒருவரின் ஆதார் அட்டையை  கொண்டுவர வேண்டும். அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை  வைத்து  பொங்கல் பரிசு  வழங்கப்படும். குறிப்பிட்ட 4 நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காதவர்களுக்கு, வருகிற 13-ந் தேதி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version