சோளிங்கர் அருகே, தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான 6.75 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள கூடலூர் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான 6.75 ஏக்கர் நிலம், தனிநபர் ஒருவரால் கடந்த 20 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலத்தை மீட்கக் கோரி, கோயில் நிர்வாகத்தினர் அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமாரிடம் மனு கொடுத்திருந்தனர். அதன் பேரில், தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்கு சென்றுள்ளார். அப்போது கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் தகராரில் ஈடுபட்டதால், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தாசில்தார் தலைமையில், கோயிலுக்கு சொந்தமான நிலம் அளக்கப்பட்டு மீட்கப்பட்டது.
Discussion about this post