குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தீர்மானம் :வாக்கெடுப்பு மார்ச் மாதம் ஒத்திவைப்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை, மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்க ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களை சந்தித்து, இந்தியாவுக்கு வரும் இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் ஐந்து அமைப்புகள் தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்க கோரி, ஐரோப்பிய மக்கள் கட்சி தீர்மானத்தை முன்மொழிந்தது. இதற்கு 271 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 199 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பை மார்ச் மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்திவைக்க ஐரோப்பிய  யூனியன் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version