புதுச்சேரி அருகே லிங்காரெட்டிபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் சாராய ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லிங்காரெட்டிபாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சாராய ஆலை செயல்பட்டு வந்தது. நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு காரணமாக அந்த ஆலை அப்போது மூடப்பட்டது.
தற்போது இந்த ஆலையை மீண்டும் செயல்படுத்த, மறைமுக ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படும் எனக்கூறி 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாராய ஆலை திறப்பதற்கான அனுமதியை புதுச்சேரி அரசு திரும்பப்பெற வலியுறுத்தப்பட்டது.
Discussion about this post