தபால் சேவையில் டிஜிட்டல் நுட்ப முறை தொடங்கி, 4 வது ஆண்டை தொடுவதையொட்டி டிஜிட்டல் தபால் சேவைகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சென்னை தி நகரில் உள்ள தலைமை தபால் நிலையத்தில், டிஜிட்டல் இந்தியா சேவை நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், தபால் துறை மூலம் மின்கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துவது முதல், செல்போன் வழியே சேமிப்புகணக்கு துவங்குவது வரையான சேவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் திருப்பதி தேஸ்தான தரிசனத்துக்கு தபால்துறை மூலம் முன்பதிவு செய்வது குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது..
Discussion about this post