புதுச்சேரியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர் செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். காரைக்கால் மாவட்டம் முழுவதும் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் அதிகரித்து உள்ளன. எனவே, சாலைகளை சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய இந்த பேரணியை முன்னாள் அமைச்சர் விசுவநாதன் தொடங்கி வைத்தார் .பின்னர், சாலைகளை சீர் செய்ய வலியுறுத்தி மஸ்தான் பள்ளிச் சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post