இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, ராமேஸ்வரம் மீனவர்கள் உள்பட மொத்தம் 20 பேரை, இலங்கை கடற்படை கைது செய்தது. கைதானவர்களில் பள்ளி மாணவர் ஒருவரும் இருப்பதாக, கிராம மக்கள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகை நேரத்தில், கைது செய்யப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக கூறினர்.