கடலூர் மாவட்டம் புடையூர் கிராமத்தில் வாரச்சந்தை அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…
புடையூர் கிராமத்தில் வசிக்கும் அதிகமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த தங்கள் பகுதியிலேயே சந்தை அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கிராம வாசிகள் தெரிவிக்கையில் தங்கள் பகுதியை சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதாகவும், அரசுக்கு சொந்தமான நிலத்தில் வாரச் சந்தை அமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
Discussion about this post