அஸ்தம்பட்டி – ராமகிருஷ்ணா சாலையில், 1945-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா பூங்காவானது தொண்டு நிறுவனங்களின் நிதி பங்களிப்பின் மூலம், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததையடுத்து மாநகராட்சி ஆணையர் சதீஷ், பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த பூங்கா, பொழுதுபோக்கு அம்சங்களுடன், நடை பயிற்சி, திறந்த வெளி உடற் பயிற்சி கூடம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, மாநகராட்சி பகுதிகளிலுள்ள பூங்காக்களை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு தொண்டு மற்றும் வணிக நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Discussion about this post