போராட்டத்தால் மூடப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு

குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக வன்முறையால் பாதிக்கப்பட்ட அசாமிலும் டெல்லியிலும் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வன்முறை தலைவிரித்தாடியதை அடுத்துக் கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடைபெற்ற பகுதிகளை ஒட்டிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் மூடப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டுள்ளன.

Exit mobile version