மதுரையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 படுகொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த முள்ளிப்பள்ளத்தில் 26 வயது இளைஞர் விக்னேஷ் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோன்று மதுரை சிந்தாமணி ஓம் சக்தி நகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் பணி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்து தேட ஆரம்பித்தனர். அப்போது அப்பகுதி டாஸ்மாக் கடை அருகே இருந்த முட்புதரில், முத்துக்குமார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கூலித்தொழிலாளி, சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். வஞ்சினிப்பட்டியை சேர்ந்த ராம்ஜி என்ற இளைஞர் குடித்துவிட்டு சென்று கொண்டிருக்கும்போது, சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 3 வயதிலும், 4 மாதத்திலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கிராமமே சோகத்தில் மூழ்கியது.