காதலி கிடைக்காமல் சிங்கிளாக இருப்போரின் மனக்கவலையை போக்கும் விதமாக ஜப்பான் அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இதனால் ஜப்பான் சிங்கிள்ஸ் உற்சாகத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.. அது என்ன சிங்கிள்ஸ்களுக்கான ஸ்பெஷல் திட்டம்? பார்க்கலாம்.
ஒரு சிலருக்கு காதல் கைகொடுத்தாலும், பலருக்கு காதல் எட்டாக்கனிதான்.. நம் நாட்டில் Arrange marriage என்ற ஒரு விஷயம் இருப்பதால் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. ஆனால் சில வெளிநாடுகளில் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை சற்று அதிகம்தான். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானில் சிங்கிள்ஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வயதாகியும் தனியாக சுற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதால், ஜப்பான் அரசாங்கமே இதை கவனத்தில் எடுத்துள்ளது.
“வாடகைக்கு காதலர்கள் திட்டம்”
பெரும்பாலான மக்கள் சிங்கிளாக இருப்பதால், மனச்சோர்வுக்குள்ளாகி தவறான முடிவுகளை எடுக்க நேரிடுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிங்கிள்ஸ்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும், அவர்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்கவும் “வாடகைக்கு காதலர்கள்” திட்டத்தை ஜப்பான் அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் சிங்கிளாக இருக்கும் ஆணோ, பெண்ணோ தனக்கு வேண்டிய காதலர்களை வாடகைக்கு எடுக்கும் வகையில் ஜப்பான் அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஆனால் இந்த திட்டத்திற்கான கட்டணம் தான் சற்று அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. காதலரை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் ஒரு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.3000 என்ற விகிதத்தில் குறைந்தது. இரண்டு மணிநேரத்திற்கு வாடகைக்கு எடுக்க வேண்டுமாம். இது தவிர கேர்ள் பிரண்டை தேர்வு செய்யத் தனியாக ரூ.1,200 கட்ட வேண்டுமாம். முதல் முறை இந்த சேவையைப் பயன்படுத்தும் போது இலவசமாக கேர்ள் பிரண்டை தேர்வு செய்யலாம். ஆனால், அதன் பிறகு தேர்வு செய்ய ரூ.1,200 கட்ட வேண்டும்.
இதுக்கு என்ன ரூல்ஸ்..!
இந்தத் திட்டத்தில் ரூல்ஸும் ரொம்பவே கடுமையாக தான் இருக்கிறது. வாடகை காதலராக இருக்கும் ஒருவர் நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள கூடாதாம். செயலி மூலமே தொடர்பு கொள்ள வேண்டுமாம். மேலும் வாடகை காதலர்களாக உள்ளவர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து விலை உயர்ந்த பரிசுகளையோ அல்லது டிப்ஸ் போன்றவற்றை வாங்கக் கூடாது என கட்டுப்பாடுகள் இருக்கிறதாம்.
சிங்கிள்ஸ்களின் மனக்கவலையை போக்க ஜப்பான் அரசு கொண்டு வந்த இந்த திட்டம் சிங்கிள்ஸ் மத்தியில் ஆதரவு கிடைத்தாலும், பலர் வாடகை காதலர் திட்டத்திற்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.