மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அழகர் கோயிலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2012ஆம் ஆண்டு பெரியாழ்வார் நந்தவனப் பூங்கா அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. ஆனால், விடியா திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இந்த பெரியாழ்வார் நந்தவனப் பூங்காவை, தற்போது பெரியாழ்வார் சிறுவர் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்து விளம்பர பலகை வைத்து உள்ளது. மேலும், பூங்காவில் பல்வேறு வேலைப்பாடுகள் நடைபெற்று, அதனைத் மீண்டும் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கி கட்டப்பட்ட கோட்டை சுவர்கள் தற்போது இடிந்து விழுந்துள்ள நிலையில், அதனை கட்ட நடவடிக்கை எடுக்காமல், அதிமுக ஆட்சியில் துவங்கிய திட்டங்களுக்கு எல்லாம், பெயர் மாற்றி விடியா திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் விமர்சிக்கின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பெரியாழ்வார் சிறுவர் பூங்கா என பெயர்மாற்றம் !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: AIADMK rulemadhuraiPeriyazwar Children's Parkrenamedstarted
Related Content
தேரடி வீதியில் தேவதையாக அருள்மிகு மீனாட்சி (ம) அருள்மிகு சுந்தரேசுவரரின் திருத்தேரோட்டம்!
By
Web team
May 3, 2023
மதுரை சித்திரைத் திருவிழா - இரண்டாம் நாள்!
By
Web team
April 24, 2023
மதுரைச் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்!
By
Web team
April 22, 2023
மதுரை சித்திரை திருவிழா - நாளை துவக்கம் - நிகழ்வுகளின் பட்டியல்!
By
Web team
April 21, 2023
சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரில் தொடங்கியது !
By
Web team
February 13, 2023