தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பாலி தீர்த்தம் அருகே அருணாச்சலேஸ்வரர் கோவிலின் துணை கோவிலான அருள்மிகு பக்த மார்கண்டேயர் கோவிலில் சிலைகளை அகற்றி, ஆக்கிரமித்ததாக வெங்கடேசன், ரமேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து கோவிலை ஆக்கிரமித்தவர்களை உடனடியாக கைது செய்யவும், இதுகுறித்து திருவண்ணாமலை டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.