நியூஸ் ஜெ. எதிராலியாக கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வெள்ளாற்றில் சூழ்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ள அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சக்திவிளாகம் எனும் கிராமத்தின் அருகில் செல்லும் வெள்ளாற்றில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த கருவேல மரங்கள் சூழ்ந்திருந்தன. இதனால் ஆற்றில் மழைக் காலங்களில் செல்லும் தண்ணீர் கிராமத்திற்குள் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகினர்.
இந்தநிலையில் வெள்ளாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த செய்தி சில தினங்களுக்கு முன்பு நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டது.
இந்தநிலையில், நியூஸ் ஜெ. செய்தி எதிரொலியாக தற்போது வெள்ளாற்றில் உள்ள கருவேல மரங்களை ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசிற்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.