பட்டன் அமுக்குறது ஒருத்தரு பகோடா சாப்டுறது இன்னொருத்தரா? ரிமோட் வைத்து படம் காட்டிய ஸ்டாலின்!

விடியா திமுக ஆட்சியிலதான், தமிழகம் தொழில் நுட்ப வளர்ச்சியில தலைசிறந்து விளங்குறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க…. ஆனா அரசு விழாவுல கல்வெட்டுகள் திறப்பு நிகழ்ச்சியில இந்த தொழில்நுட்பம் சிக்கி சின்னாபின்னமாயிருக்கு…

தஞ்சாவூருல ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளோ திறப்பு விழா நடந்துச்சு. இதுல கலந்துகிட்ட ஸ்டாலின், அங்க வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள திறந்து வச்சாரு… மேடையில இருந்துகிட்டு கல்வெட்டுகள நோக்கி ரிமோட் பட்டன ஸ்டாலின் அழுத்துனதும் அங்க திரைச்சீலை விலகிச்சு… எல்லாரும் கைதட்டுனாங்க…

ஆனா என்ன விஷயம்னா, அந்த திரைச்சீலை ஸ்டாலின் பட்டன அழுத்துனதால தொறக்கல, அந்த கல்வெட்டுகள் பக்கத்துலயே நின்னுக்கிட்டுருந்த ஒருத்தரு திரைச்சீலைகள கையால இழுத்து திறந்து வச்சிருக்காரு…

இப்படி பட்டன் அமுக்க ஒருத்தரு, திரைசீலய பிடிச்சி இழுத்துவிட ஒருத்தருன்னு… விடியா ஆட்சியில கல்வெட்டு திறப்புவிழாவுக்கான தொழில்நுட்பம் சிரிப்பா சிரிச்சிருக்கு…

ஒரு திரைச்சீலையையே ஒழுங்கா திறந்து வைக்க முடியல… இதுதானா விடியா அரசோட தொழில்நுட்ப டக்குன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

Exit mobile version