உடுமலைபேட்டை அருகே, வாழைத்தோப்பில் 12 ஆம் நாளாக தஞ்சம் அடைந்துள்ள சின்னதம்பியால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுமென வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில், 12-ஆவது நாளாக இருக்கும் சின்னத்தம்பி யானை, கடந்த 4 நாட்களாக வாழைத்தோப்பில் தஞ்சமடைந்துள்ளது. சின்னதம்பி யானை பகலில் அடிக்கடி அப்பகுதியில் வெளியே உலாவிவிட்டு, இரவில் கரும்பு மற்றும் வாழைத்தோப்பில் தஞ்சம் அடைந்து வருகிறது. மற்ற காட்டு யானைகளை போல அல்லாமல், சின்னதம்பி, பொதுமக்களை எந்தவொரு தொந்தரவும் செய்வது இல்லை. சின்னதம்பியால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுமென வன அலுவலர் கூறியுள்ளார். இதனை காண பொதுமக்கள் நாள்தோறும் அதிக அளவில் கூடுவதால் உரிய பாதுகாப்பு வழங்கபடுவதற்காக வனத்துறையினர், காவல் துறையினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டடோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.