ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தும் “ஜியோ புக்”! இதுதான் இந்தியாவின் முதல் கற்கும் சாதனமாம்!

உலகம் ஒரு டெக்னாலஜியால் மூழ்கி இருக்கும் காலம் இது. இந்த காலத்தில் ஒவ்வொரு டெக்னாலஜி நிறுவனமும் போட்டிப் போட்டுக்கொண்டு தங்களுடைய புதிய புதிய கண்டுபிடிப்புகளை பொதுமக்களிடையே அறிமுகப்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களை தங்களின் வாடிக்கையாளர்களாக மாற்றுவதே அவர்களின் முக்கிய நோக்கு. அதற்காக இப்பெரு நிறுவனங்கள் வணிகப் போட்டியில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல் இது. அதற்கு ஏற்றார் போல்  தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோபுக் என்கிற புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது. அதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ரீட் டெய்ல் நிறுவனம் ‘ஜியோ புக்’ எனும் லேப்டாப் போன்ற சிறிய வகை சாதனைத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, இந்தியாவின் முதல் கற்கும் சாதனமாக இருக்கும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் கல்வி, ஆன்லைன் வணிகம் உள்ளிட்ட எண்ணற்ற செயல்களில் ஈடுபட, அனைத்து வயதினருக்கும் ஏற்ப, ஜியோபுக் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஜியோ புக், ஆக்ஸ்ட் 5 முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விற்பனை விலை 16,399 ஆகும். இதன் சிறப்பம்சங்கள் 4ஜி எல்.டி.இ மற்றும் டூயல் பேண்டு வைபை, 75க்கும் அதிகமான கீபோர்ட் ஷார்ட் கட்ஸ், ஒயர்லெஸ் பிரிண்டிங் வசதி, 4 ஜி.பி, எக்ஸ் 64 ஜிபி, ஜியோ ஓ.எஸ், அல்ட்ரா ஸ்லிம், 990 கிராம் எடை, 11.6 அங்குல எச்.டி டிஸ்ப்ளே, இன்பினிட்டி கீபோர்டு போன்ற அம்சங்கள் இந்த ஜியோபுக்கில் உள்ளது.

Exit mobile version