மருத்துவ வளர்ச்சி:
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதுபோலவே தான் மருத்துவத்துறையும் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம். நோய்களை குணப்படுத்துவதற்கான அறிவியலும், கலையும் சேர்ந்ததே மருத்துவத்துறையாகும். மனித உயிர்களை காத்துக்கொள்ளவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் மருத்துவத்துறை இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இந்தியாவில் பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் மேலைநாடுகளுக்கு இணையாக மருத்துவத் தொழில்நுட்பங்கள் மேம்பட்டு வருகின்றன என்று சொல்லலாம். நோய்க்கணிப்பில் ‘செயற்கை நுண்ணறிவும்’ சிகிச்சையில் ‘ரோபாட்’டும், ‘நானோ தொழில்நுட்ப’மும் புகுந்துள்ளன. இதனால் சிகிச்சைகளின் தரம் முன்னேறிய நாடுகளுக்குச் சமமாக இருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மருத்துவ துறையின் வளர்ச்சியை வைத்தும் கணக்கிடலாம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவத் துறையானது அபார வளர்ச்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று மருத்துவத் துறையின் வளர்ச்சி என்பது ஒவ்வொரு நாடுகளின் முன்னேற்றத்தில் இன்றியமையாததாக உள்ளது.
துல்லியமான தொழில்நுட்பம்:
வடமாநில தொழிலாளி ஒருவரின் தலையில் பதிந்த ஆணியை நவீன அறுவை சிகிச்சை முறையில் அகற்றியது ரேலா மருத்துவமனை. சென்னை நாவலூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை நடைபெற்றபோது அங்கு இருந்த வடமாநில தொழிலாளி பிரம்மா மீது எதிர்பாராத விதமாக இரண்டு அங்குல ஆணி விழுந்த நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் உடன் பணி புரியும் தொழிலாளர்கள். பிரம்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மருத்துவர் எம். அன்புசெல்வம் தலைமையில் வெற்றிகரமாக சிகிச்சை நடந்து முடிந்தது. இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபொழுது மண்டை ஓடு கழுத்து மற்றும் முதுகு பகுதியில் சி.டி. ஸ்கேன் மற்றும் சி.டி ஆஞ்கியோகிராம் பரிசோதனை செய்யபட்டது. இதன் மூலம் ஆணி வழக்கமான ஆணி அல்ல என்றுதெரியவந்தது. ஆணியை அகற்ற ’’பைபர் ஆப்டிக்’’ சூழலை பயன்படுத்தும் அணுகுமுறையோடு மாற்று வழிமுறையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றார். இது மிகவும் நுட்பமான அதே வேளையில் அதிக சிக்கல்களும் நிறந்த அறுவை சிகிச்சை முறையாகும்.
Discussion about this post