விடியா திமுக அரசு அறிவித்த பதிவுத்துறை கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சொத்து பரிமாற்றம் தொடர்பான பத்திரங்கள் அனைத்தும் சார்- பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பொது அதிகாரம் கொடுப்பது, பாகப்பிரிவினை, செட்டில்மெண்ட் செய்வது, விடுதலை, குத்தகை போன்ற நடவடிக்கைகளும் புழக்கத்தில் உள்ளன.
இதில், பெரும்பாலான பரிமாற்றங்கள் விற்பனையாக கருதப்படாது என்பதால், குறைவான தொகையே, பதிவுக் கட்டணமான வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணங்கள், 20 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. தற்போது, பதிவு கட்டணங்கள் மாற்றப்பட்டு உள்ளன. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
வீடுகள் விலை உயரும்…!
சென்னை போன்ற நகரங்களில், நிலத்தின் விலையும், வழிகாட்டி மதிப்புகளும் அதிகமாக உள்ளன. இந்த மதிப்பில், 1 சதவீத தொகையை பொது அதிகார ஆவண பதிவுக்கு கட்டணமாக நிர்ணயிப்பது செலவை அதிகரிக்கும். உதாரணமாக, 10,000 ரூபாயில் முடிக்க வேண்டிய ஒரு பொது அதிகார ஆவண பதிவுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் செலவு, வீட்டின் விலையில் தான் சேரும் என்பதால், இது, பொது மக்களுக்கு சுமையாக அமையும். இதனை விடியா திமுக அரசு கண்டும் காணாமல், தங்கள் நலனிற்காக மட்டுமே இதனை செய்துள்ளது. கட்டுமான ஒப்பந்த பதிவு கட்டணமும், 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது, வீடு வாங்குவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.