கடலூரில் வட்டார சேவை மையம் தொடக்கம்

பண்ருட்டி அருகே உள்ள அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார சேவை மையம் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்  30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வட்டார சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதைதிறந்து வைத்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம், மக்கள் பயன் பெறும் வகையில்  பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். 

Exit mobile version