பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அனைத்து அணைகளில் இருந்தும், தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரு நாளில் 12 அடி உயர்ந்தது. தற்போது பில்லூர் அணையில் இருந்து 19 ஆயிரத்து 800 கனஅடி நீர் மட்டுமே உபரிநீராக திறந்து விடுப்படுவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 87 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து 31 ஆயிரத்து 38 கனஅடியாகவும், நீர் இருப்பு 19புள்ளி 74 டிஎம்சியாக உள்ளது. அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் வரும் 15ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post