சீன ராணுவத்தில் தரைப்படை வீரர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு கீழ் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 20 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய வலிமை மிக்க ராணுவமாக சீன ராணுவம் விளங்கி வருகிறது. தரைப்படையில், சண்டையிடும் பிரிவு தவிர்த்து மற்ற பிரிவுகளில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையில், 50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடற்படை மற்றும் விமானப்படையை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விரிவாக்கம் செய்வதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post