கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்குத் திறந்து விடப்படும் நீரின் அளவானது 17 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 14 ஆயிரத்து 225 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இந்த இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 17 ஆயிரத்து 225 கன அடியாகக் குறைந்துள்ளது.
இதனால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவிற்கு 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து காலை 8 மணி நிலவரப்படி 19 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்துள்ள போதிலும், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.