விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை 2-வது முறையாக குறைப்பு

நிலவை சுற்றி வரும் விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை 2-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவை சுற்றி வரும் விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை ஏற்கனவே 104 கிலோ மீட்டர் தொலைவுக்கு குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு குறைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதிகாலை 3.42 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவுக்கு அருகில் குறைந்தபட்சமாக 35 கிலோ மீட்டரும், அதிகபட்சமாக 101 கிலோ மீட்டரும் நிலைநிறுத்தபட்டது. வரும் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version