பன்றிக் காய்ச்சலைத் தடுக்க 19 லட்சம் டாமிபுளூ மாத்திரைகள் தயாராக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல், ஒரே நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் மற்றும் சுகாதாரப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்றிக் காய்ச்சலைத் தடுக்க 19 லட்சம் டாமிபுளூ மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். அதே போல், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.