3வது நாளாக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றது.
16வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், 3வது நாளாக 2 போட்டிகள் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. இதனால், 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பெங்களூரு அணி 16.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 82 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நிற்கிறார். இறுதியில் ஒரு வின்னிங் ஷாட் அடித்து இரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தார். அதேபோல அதிரடியாக ஆடிய கேப்டன் ஃபாப் டூ ப்ளெஸிஸ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ப்ளேயர் ஆப் த மேட்ச் அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 12 வருடங்களாக மும்பை அணி தனது முதல் லீக் மேட்சில் தோற்றுக்கொண்டேதான் இருக்கிறது என்பது வரலாறு.
Discussion about this post