சாதனை அஸ்வின்… சோதனை வெஸ்ட் இண்டீசிற்கு..!
ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 3-வது இந்தியர் என்ற சாதனையை அஸ்வின் படத்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தொடக்க நாளில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 24.3 ஓவர்களில் 6 மெய்டனுடன் 60 ரனக்ள் மட்டுமெ விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் வெளியே உட்கார வைக்கபட்ட அஸ்வின் அணியில் மீண்டும் தனது முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறார். அத்துடன் முக்கியமான சாதனைகளையும் படைத்தார். இந்த விக்கெட்டுகளை சேர்த்து ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் 479 விக்கெட் ஒரு நாள் போட்டியில் 151 விக்கெட், 20 ஓவர் போட்டியில் 72 விக்கெட் அஸ்வின் விக்கெட் எண்ணிக்கை 702 ஆக உயர்ந்த்தது. இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 16-வது வீரர் இந்திய அளவில் 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். இந்திய த்ரப்பில் ஏற்கனவே முன்ன்னால் சுழற்பந்து வீச்சாளர்கள் அனில் கும்பிளே (953 விக்கெட்) ஹர்பஜன்சிங் (707 விக்கெட்) இந்த இலக்கை கடந்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியோரில் உலக அரங்கில் 3-வது இடங்களில் முறையே இலங்கையின் முத்தையா முரளிதரன் (1,347 விக்கெட்) ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (1,001) இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண் டர்சன் (975) உள்ளனர். தனது 93-வது டெஸ்டில் விளையாடும் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்சில் 5 விகெட் வீழ்த்துவது. இது 33-வது முறயாகும். ஒரு இன்னிங்சில் அதிக முறை 5 அல்லது அதற்க்கு மேல் விக்கெட் சாய்த்த சாதனையாளர் பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி அவர் 6-வது இடத்திற்கு முன்னேறினார்.
இந்த சாதனை வரிசையில் முதல் ஐந்து இடங்களில் முரளிதரன், ஷேன் வார்னே, நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ, கும்பிளே, இலங்கையின் ஹெராத், ஆகியோர் உள்ளனர். முதல் ஆட்டம் முடிந்ததும் தமிழகத்தைச் சேர்ந்த 36 வயதான அஸ்வின் நிருபர்களிடம் கூறுகையில்; முதல் நாலில் எங்களது செயல்பாடு மிகச்சிறப்பாக இருந்தது. முதல் பகுதியில் உற்சாகமாக பந்து வீசினேன் என்றார். மேலும் அவர் கூறுகையில் உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகாக ஆடும் லெவலில் நான் தேர்வுசெய்யப்படவில்லை என்றார். ஆனால் இதற்காக வருந்தவும் இல்லை என்று கூறினார். ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதராகவும் உச்சத்தை தொட்ட யாரும் தோல்வியை சந்திகாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்றார். தோல்வியை சந்தித்தாலே வெற்றியை நாம் பார்க்க முடியும் என்ற பாடத்தை நா கற்றிக்கொண்டேன் என்றார். தோல்விகளை கண்டு நாம் துவண்டு போகாமல் வெற்றிக்கான பாதையில் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.