விடியா அரசு பதவி ஏற்ற முதல் தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்களின் கடத்தல் அதிகரித்து வருகிறது. கடத்தல் கும்பலைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறுவதாகவும் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதற்கு என விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பலவும் அரசு அதிகாரிகள் துணையுடன் கடத்தப்பட்டு வருகிறது.
விடியா அரசு பதவியேற்ற நாள் முதல் ரேஷன் பொருள்களின் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலிருந்து எல்லை வழியாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் நல்ல விலை கொடுத்து வாங்கப்படுகிறது. இதை வைத்து லாபம் சம்பாதிக்க நினைக்கும் அரசு அதிகாரிகள் சிலர் ரேஷன் கடை ஊழியர்களை கூட்டு சேர்த்து பொருள்களை ஏழை மக்களுக்கு வழங்காமல் கடத்துகின்றனர்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை அந்தந்த பகுதியில் உள்ள ஒருசில நபர்கள் விலை கொடுத்து வாங்கி அதனை சரியான முறையில் பளபளவென தீட்டி ரயில், லாரிகள் மூலம் கடத்தி வருகின்றனர். கடத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கு வரும் புகார்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
பெயரளவுக்கு சில கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்களும் விரைவில் விடுவிக்கப்படுகின்றனர். இதனால் ரேஷன் பொருள்கள் கடத்தல் என்பது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த அதிமுக பொற்கால ஆட்சியில் ரேஷன் பொருள்கள் கடத்தல் கும்பல் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட்டனர். ஆனால் இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடத்தல்கள் அதிகரித்து வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை, காவல்துறையினர் பெயரளவிற்கு மட்டுமே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.