உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய மாணவர் அமைப்பினர் உச்சநீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் நடத்திய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி பாப்டே தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு பெண் ஊழியரின் பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கு விசாரணையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து அகில இந்திய மாணவர் அமைப்பினர் உச்சநீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்ற வளாகத்தில்144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.