இராம்நாட்டில் தொடர் கொள்ளை சம்பவம்! சட்ட ஒழுங்கு சீர்கேடு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கைவரிசை காட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடர் குல திலகங்கள் சிக்கியது குறித்து பார்ப்போம்.

இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்று கேள்வி கேட்க வைக்கும் முகபாவத்துடன் காட்சி அளிக்கும் இவர்கள்தான் ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதி, புளிக்காரத் தெருவில் உள்ள கோயில் பூசாரி வீட்டில் கடந்த 14ஆம் தேதி ம்ர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே போன்று, 25ஆம்தேதி பஜார் காவல் நிலைய சரகம் ராணிசத்திர தெருவில் உள்ள இரண்டு வீடுகளிலும், கீழக்கரையில் ஒரு வீட்டிலும் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருட்டு போனது. இந்த புகார்களின் பேரில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி அந்தனர். இந்த நிலையில் பூசாரி வீட்டில் நிகழ்ந்த திருட்டு தொடர்பாக, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த கேணிக்கரை போலீசார், ஏர்வாடி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் தங்கியிருந்த குடவாசலை சேர்ந்த முருகானந்தம் மற்றும் சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த ஹரிபிரசாத் ஆகியோரைப் பிடித்து விசாரித்த அவர்கள் பூசாரி வீட்டிலும் அதைத் தொடர்ந்து மற்ற இடங்களிலும் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது.

அதே போல, கடந்த ஏப்ரல் மாதம் கோயம்புத்தூர், ராமநாதபுரம் சிங்கா நல்லூர் மற்றும் மதுரைப் பகுதிகளிலும் அவர்கள் நகைகள் மற்றும் பணத்தை திருடியிருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், மதுரை, பள்ளிக்கரனை, தாம்பரம், திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி மற்றும் மோசடி வழக்குகள் இருவர் மீதும் நிலுவையில் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்கள் கேணிக்கரை, பஜார் கீழக்கரை, மதுரை பகுதிகளில் திருடிய 24 சவரன் தங்க நகை, 1கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 30ஆயிரம் ரூபாய் ரொக்கம், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடுகள், நகை அளவீடு செய்யும் டிஜிட்டல் எடை மிஷின் ஆகியவற்றை அவர்கள் தங்கியிருந்த ஏர்வாடி மஹாலிலும், முருகானந்தம் குடும்பத்துடன் குடியிருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள வீட்டிலும் கைப்பற்றினர்.

– செய்தியாளர் பா.லிங்கேஸ்வரன் மற்றும் ஆசாத்.

 

Exit mobile version