சூறைக்காற்று அச்சுறுத்தல்: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

ராமேஸ்வரம் பகுதியில் சூறைக்காற்று காரணமாக, தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மீன்பிடிக்க செல்லப் போவதில்லை என மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் பாம்பன் உள்ளிட்ட மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினரும் இந்திய வானிலை மையமும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து வரும் 9 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்லப்போவதில்லை என்று ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதன் காரணமாக அரசால் வழங்கப்படும் அனுமதி டோக்கன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version