தனுஷ்கோடியில் சாலையில் குவியும் மணலால் பொதுமக்கள் பாதிப்பு

பலத்த சூறைக்காற்றின் காரணமாக, தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவியல் சூழ்ந்திருப்பதால், வாகனங்களை இயக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சுற்றுலாத் தலம் தனுஷ்கோடி. குறிப்பாக, தனுஷ்கோடியைப் பார்ப்பதற்காகவும், அருகில் இருக்கும் அரிச்சல்முனையில் புனித நீராடவும் நூற்றுக்கணக்கான மக்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

இதனிடையே கடந்த ஒரு வாரகாலமாக தனுஷ்கோடியில் தெற்கே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் முகுந்தராயர் சத்திரம் அருகே கடற்கரை மணலால் சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கு சுற்றுலாப்பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் சாலையைக் கடக்கும்போது இங்கு புழுதி புயல் வீசுவதால், பொதுமக்கள் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் உள்ள மணலை அப்புறப்புடுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version