மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில், 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில், பலத்த காற்று வீசிவருகின்றது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்கரை ஓரங்களில், கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், கரை ஓரம் வசிக்கும் மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் இன்று முதல், மறு உத்தரவு வரும் வரை, கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
Discussion about this post