மன்னார் வளைகுடா பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி, இராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் சூறைகாற்று வீசி வருகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு இன்று ரத்து செய்யப்பட்டது. 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. எனவே, மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post