திமுகவினர் என்றால் பொய் பேசக்கூடியவர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். விக்கிரவாண்டியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராமதாஸ், இடைத்தேர்தலில் திமுக-வை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டார். பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.
Discussion about this post